மனைவி மாதவிடாய் காலத்தில் கணவன் கோவிலுக்கு போகலாமா? என்ன கூறுகிறது சாஸ்திரம்?

மரபுகளின் படி, பெண்ணின் மாதவிடாய் காலத்தின் போது அவர்கள் கோவிலுக்கு உள்ளேயோ அல்லது வீட்டினுள் இருக்கும் பூஜை அறையின் உள்ளேயோ செல்ல அனுமதிப்பதில்லை.


வீட்டின் மற்ற உறுப்பினர்களை விட்டு தள்ளியே இருக்க வேண்டும்; கூந்தலை வார கூடாது; ஊறுகாயை தொடக்கூடாது; கண்மை அல்லது வேறு எந்த ஒரு அழகு சாதன பொருட்களையும் தொடக்கூடாது; சமலயறைக்குள் நுழையக் கூடாது; இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், மாதவிடாய் காலத்தின் போது ஒரு எளிய வாழ்க்கையை அப்பெண் வாழ்ந்திட வேண்டும்.

அதே சமயத்தில் பெண்கள் மாதவிலக்கு ஆன நாளில் ஆண்கள் கோவிலுக்கு போகலாமா என்று கேட்டால் அதற்கு விடை போகலாம். ஆனால் இந்து மரபுப்படி அந்த ஆண் மாதவிலக்கு ஆன பெண்ணைத் தொடாமல் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாது அந்த ஆண் உட்கொள்ளும் உணவினைச் சமைத்ததில் மாதவிலக்கு ஆன பெண்ணிற்கு எந்தவிதமான தொடர்பும் இருக்கக் கூடாது.

உணவு மட்டுமல்லாது அவர் உடுத்திக்கொள்ளும் உடையானது மாதவிலக்கு நேரத்தில் அந்தப் பெண் துவைத்ததாக இருக்கக் கூடாது. மொத்தத்தில் மாதவிலக்கு ஆன பெண் குடும்பப் பணிகளில் இருந்து ஒதுங்கி தனித்து அமர்ந்திருக்கும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் கோயிலுக்குச் செல்லலாம். ஆண்கள் மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள இதர பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருக்கும் இந்த விதி பொருந்தும்.