துரைமுருகன் வீட்டிலிருந்து பெட்டி பெட்டியாக அள்ளிச்சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள்! மரண பீதியில் ஸ்டாலின்!

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பதற்கு ஏற்ப துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையால் ஸ்டாலின் பீதி அடைந்துள்ளார்.


நேற்று நள்ளிரவு யாரும் எதிர்பாராத வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வேலூர் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டிற்குச் சென்றனர். அப்போதுதான் தேர்தல் பணிகளை முடித்துவிட்டு துரைமுருகன் மற்றும் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அவரது மகன் கதிர் ஆனந்த் வீட்டிற்கு வந்திருந்தனர்.

வந்திருப்பது வருமான வரித்துறை அதிகாரிகள் என்ற அறிந்ததுமே துரைமுருகன் அதிர்ந்து போனார். உடனடியாக திமுக வழக்கறிஞர் அணிக்கு துரைமுருகன் தரப்பிலிருந்து தகவல் சென்றது. வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த பரந்தாமன் காட்பாடிக்கு மின்னல் வேகத்தில் வந்து சேர்ந்தார்.

வருமான வரித் துறை அதிகாரிகளிடம் வந்ததற்கான காரணத்தைக் கேட்ட பரந்தாமன் நள்ளிரவு நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்த வருவதற்கு அனுமதி இல்லை என்கிற சட்டப்பிரிவை சுட்டிக்காட்டினார். ஆனால் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் மட்டுமே இரவு நேரத்தில் செல்லக்கூடாது என்றும் தனிநபரின் வீட்டிற்குள் செல்வதில் தவறில்லை என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் பரந்தாமனுக்கு எடுத்துரைத்தனர். ஆனால் அப்படி ஒரு சட்டப் பிரிவை இல்லை என்று ஆதாரத்துடன் பரந்தாமன் எடுத்துக் காட்டி அதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

இதனால் துரைமுருகன் உள்ளிட்டோர் நிம்மதி பெருமூச்சு விட்ட சில மணி நேரங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அங்கு வந்து சேர்ந்தனர். துரைமுருகன் வீட்டில் கணக்கில் வராத பணம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தேர்தல் ஆணை பெற்று வந்திருப்பதாக அவர்கள் கூறினார். இதனைப் பார்த்த திமுக வழக்கறிஞர் அணி வேறு வழியில்லாமல் தேர்தல் பறக்கும் படையினர் உள்ளே அனுமதித்தனர்.

தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் in வேண்டுகோளுக்கு ஏற்ப வருமான வரித் துறை அதிகாரிகளையும் துரைமுருகன் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் துரைமுருகன் வீட்டை சல்லடையாக ஜலித்தனர்.

கணக்கில் வராத 10லட்சம் ரூபாய் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் அள்ளிச்சென்றனர்‌ அதோடு மட்டுமல்லாமல் ஏராளமான ஆவணங்களை இரண்டு பெட்டிகளில் வைத்து அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். பணம் போனதைப் பற்றிக் கூட துரைமுருகன் கவலைப்படவில்லை. ஆனால் அந்த ஆவணங்கள் போனதுதான் துரைமுருகனுக்கு தலைசுற்றலை ஏற்படுத்தியது.

ஏனென்றால் திமுக பொருளாளர் என்கிற முறையில் அக்கட்சியின் வேட்பாளர்களின் வரவு செலவு கணக்குகளை மொத்தமாக துரைமுருகன் தான் கவனித்து வந்தார். அந்த வகையில் கட்சித் தலைமை வேட்பாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பல விவரம் முழுக்க முழுக்க துரைமுருகன் வசம் தான் இருந்தது. எந்த வேட்பாளருக்கும் எவ்வளவு சென்றுள்ளது எந்த வேட்பாளருக்கு இனி எவ்வளவு செல்ல வேண்டும் என்கிற விவரமும் துரைமுருகன் வசம் தான் இருந்தது. இந்த விவரங்களை எழுதி வைத்திருந்த ஆவணங்களை தான் வருமான வரித்துறை அதிகாரிகள் துரைமுருகன் வீட்டிலிருந்து அல்லி சென்றதாக கூறுகிறார்கள்.

இதனால்தான் இந்த வருமான வரித்துறை சோதனை மூலமாக பீதியடைந்து ஸ்டாலின் அவசர அவசரமாக காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மோடி காபந்து பிரதமர் என்றும் அவர் பேச்சைக் கேட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆடுவதாக தெரிவித்துள்ளார் ஸ்டாலின். மேலும் வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகளை தற்போது உச்ச நீதிமன்றம் நிர்வகிக்க வேண்டும் என்றும் சம்பந்தமே இல்லாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதுக்கெல்லாம் காரணம் திமுக வேட்பாளர்கள் தொடர்புடைய முக்கிய வரவு செலவு கணக்குகள் மாயமானதால் என்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். அந்த ஆவணங்களின் அடிப்படையில் திமுக வேட்பாளர்களை விசாரணைக்கு அழைத்து அலைக்கழிக்கும் வருமான வரித் துறை திட்டமிட்டு உள்ளதாகக் கூறுகிறார்கள்