பரிகாரம் செய்வதாக பெண்களிடம் செக்ஸ் அத்துமீறல்! பிரபல சாமியாரின் லீலைகள் அம்பலம்!

மாந்திரீகம் மற்றும் பில்லிசூனியம் முதலிய செய்வினைகளில் வித்தகர் என்று கூறி பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார் ஒருவரை கைது செய்திருப்பது திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதிக்கு அருகில் ஓங்கலூர் என்ற இடம் அமைந்துள்ளது. அங்கு மணி என்கிற செல்வமணி வாழ்ந்து வந்தார். இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் மனைவியை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.

திண்டிவனத்திற்கு அருகாமையில் உள்ள பல பகுதிகளில் தனக்கு பல்வேறு மாந்திரீக முறைகள் தெரியும் என்று மக்களை நம்ப வைத்துள்ளார். குறிப்பாக பாதிரியாரநல்லூர் மற்றும் காட்ராம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தான் பில்லிசூனியம், செய்வினை முதலிய மாந்திரீக வழிமுறைகள தன்னிடம் வருபவர்களின் விருப்பத்திற்கேற்ப உபயோகித்துள்ளார். மேலும் மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்

இந்நிலையில் 1 ஆண்டிற்கு முன்பு இவரைப்பற்றி அறிந்து காஞ்சிபுரத்தில் உள்ள வடமலைப்பாக்கத்தை சேர்ந்த நபர் இவரிடம் சென்றுள்ளார். அதாவது தன் மகள் ஒருவனை காதலிப்பதாகவும் அவனை மறப்பதற்கு ஏதேனும் பரிகாரங்களை கூறுமாறும் கேட்டுள்ளார். இந்த சம்பவத்தின் போது அந்த ஊரில் கோயில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. செல்வமணிக்கு தன்னிடம் வரும் பெண்களை ருசிபார்க்க வேண்டும் என்ற காம எண்ணம் எப்போதும் இருந்தது.

சூழ்நிலையை சரியாக பயன்படுத்தி அந்த பெண்னை தன்னுடன் தனியாக அனுப்பி வைக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார். வேறுவழியின்றி பெற்றோரும் அவ்வாறே செய்தனர். தற்போது 1 ஆண்டு கழித்து அந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை விசாரித்த போது அவர் பல பெண்களை இவ்வாறு ஏமாற்றியது தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.