வன்னியர், தேவர், கவுண்டர், நாடார், முத்தரையர், முதலியார், செட்டியார், யாதவர் என்று பிரிந்த காரணத்தாலே 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் காலி..?

இந்திய மக்கள் ஜாதி ரீதியாக பிரிந்து கிடக்கும் காரணத்தாலே, மருத்துவ மேல்படிப்பில் உரிய இடத்தைப் பிடிக்க இயலவில்லை. பா.ஜ.க .அரசால் கடந்த மூன்று வருடங்களில் இந்தியா முழுவதும் ஓ.பி.சி. பிரிவினருக்கு சட்டப்படி கிடைக்கவேண்டிய 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் பறிக்கப்பட்டு பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.


இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்து மக்களை திசைதிருப்பி விட்டுவிட்டு பா.ஜ.க. ஆட்சியை பயன்படுத்தி பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களின் 10,000 மருத்துவ இடங்களை பிடுங்கிவிட்டார்கள். இனியும் விழித்துக் கொள்ளாமல் பாசிச காவிகளின் திசைதிருப்பும் ஏமாற்று சொற்களை அடையாளம் காணாமல் இருந்தால் ஆண்ட சமுதாயம் பெருமை பேசும் பிற்படுத்தப் பட்ட மக்களின் கோவணம் கூட மிஞ்சாது ஜாக்கிரதை.. 

சும்மா வந்துவிடவில்லை இந்த இட ஒதுக்கீட்டு உரிமை பெரியார், அண்ணல் அம்பேத்கார் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் போராடிப் பெற்ற உரிமை இது. இதை காக்க தவறினால் இன்னும் 10 ஆண்டுகளில் கல்வியில் வேலை வாய்ப்பில் ,பிற்படுத்தப்பட்ட சமூகம்

100 ஆண்டுகள் பின்னோக்கி போய்விடும் என்று காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை செய்துவருகிறது. இனியாவது விழிப்பார்களா இதர ஜாதியினர்.