பொங்கல் திருவிழா! ஒரே அறிவிப்பின் மூலம் சென்னை வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மெட்ரோ ரயில் சேவை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில்களில் 50% கட்டண குறைப்பு மற்றும் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு இலவச மெட்ரோ சேவை வழங்க உள்ளது.


தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடி வருகிறோம் . அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழாவை நம்முடைய தமிழக அரசு மெட்ரோ சேவையில் சலுகை அளித்து கொண்டாட உள்ளது. வரும் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் பொங்கல் விழாவானது வெகு விமர்சையாக தமிழகத்தில் கொண்டாட உள்ளது . 

இந்த 3 தேதிகளில் மெட்ரோவில் பயணிப்பவர்கள் 50% கட்டணத்தை செலுத்தி பயணித்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் மூன்றாவது பொங்கல் நாளான காணும் பொங்கல் தினத்தன்று சென்னை மெரினா கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் மெட்ரோ சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு மகிழ்ச்சிபடுத்தி இருக்கிறது. 

இதேபோல் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போதும் மெட்ரோ சார்பாக 50 சதவீத கட்டண குறைப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே மெட்ரோ ரயிலின் கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதால் சாதாரண பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளாத நிலை நிலவி வருகிறது . ஆகையால் பொதுமக்களின் மத்தியில் மெட்ரோ ரயிலின் சேவையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதனுடைய பயன்பாட்டை அதிகரிக்கும் தமிழக அரசு இத்தகைய முடிவில் ஈடுபட்டுள்ளது.