திடீரென மண்ணுக்குள் புதைந்த அடுக்குமாடி கட்டிடம்..! அலறி அடித்து வெளியே ஓடி வந்த மக்கள்! சென்னையில் பகீர் சம்பவம்!

சென்னை வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அருகில் இருந்த வீடு ஒன்று திடீரென மண்ணுக்குள் புதைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் பகுதி வரை மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் அருகே சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்றது. அந்த இடத்தில் ராட்சத கிரேன் மூலமாக பள்ளம் போன்ற வேலைகள் நடைபெற்று வந்தது.

ராட்சத கிரேன் மூலமாக பள்ளம் தோண்டும் வேலை நடைபெற்று வந்தபோது சுரங்கப் பாதைக்கு அருகே இருந்த லோகநாதன் என்பவரின் வீடு இடிந்து பூமிக்கு அடியில் சென்றது. அந்த கட்டிடத்தில் இருந்த டீ கடை ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை ஏதும் இன்றி மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருவதால் குடியிருப்புகளில் விரிசல் ஏற்படுகின்றன என்று அப்பகுதி வாழ் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.