பாலில் சயனைடு! என் மகள் மூச்சை நிறுத்துகிறார்! தற்கொலைக்கு லைவ் கமென்ட்ரி கொடுத்த கொடூர தந்தை! அதிர்ச்சி காரணம்!

விழுப்புரத்தில் கடன் தொல்லை தாங்க முடியாமல் பாலில் சயனைடு கலந்து கணவன் மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது .


விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகரை சேர்ந்தவர்கள் அருண் குமார் (34) மற்றும் சிவகாமிசுந்தரி (28) தம்பதியினர் ஆவர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஆறு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் பிரியதர்ஷினி, (3) யுவஸ்ரீ (4) , பாரதி(1) என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அருண்குமார் அதே பகுதியில் நகை பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். அந்த நகை பட்டறையில் 5 வேலை ஆட்கள் பணி செய்து வருகின்றனர்.

தொழில் நிமித்தமாக அருண்குமார் பல இடங்களில் கடன் வாங்கியிருக்கிறார். மேலும் அந்த கடனை திருப்பித் தர இயலாமல் மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறார். தன்னுடைய தொழிலிலும் பெரும் நஷ்டத்தை சந்தித்த அருண்குமார் லாட்டரி சீட்டுகளை வாங்கும் பழக்கத்தில் இறங்கியிருக்கிறார். ஆகையால் 3 நம்பர் லாட்டரி சீட்டை வாங்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார் அருண்குமார். 

தொடர்ச்சியாக தொழிலில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வந்த அருண்குமார் செய்வதறியாது திகைத்து போய் இருந்திருக்கிறார். அந்நேரத்தில் தன் மனைவி சிவகாமசுந்தரி இடம் சென்று நாம் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறார் . உடனே அவரும் கணவன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் சரி என்று பதிலளித்திருக்கிறார். இதனையடுத்து அருண்குமார் அருகிலிருந்த கடைக்குச் சென்று நேற்று மாலை அளவில் சயனைட் குப்பிகளை வாங்கி வந்திருக்கிறார்.

சயனைட் குப்பிகளை வாங்கி வந்தவுடன் தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு அதனை வீடியோவாக பதிவு செய்து தானும் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் ஆகிய அனைவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ பதிவு செய்து அனுப்பி இருக்கிறார்.

பின்னர் சயனைட் குப்பிகளை பாலில் கலந்து தங்களுடைய மூன்று பெண் குழந்தைகளுக்கும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கொடுத்துள்ளனர். மேலும் அருண்குமாரின் மனைவியும் அதனை குடித்திருக்கிறார். சயனைட் கலந்த பாலை குடித்த அருண் குமாரின் மூன்று குழந்தைகள் மற்றும் மனைவி ஆகிய அனைவரும் மயங்கி விழுந்து உள்ளனர். பின்னர் அருண்குமாரும் மதுபானத்தில் சயனைட் குப்பிகளை கலந்து குடித்து மயங்கி விழுந்திருக்கிறார்.

இதனையடுத்து வீடியோவை பார்த்து அருண்குமாரின் நண்பர்கள் பதறியடித்துக்கொண்டு அருண் குமாரின் வீட்டிற்கு ஓடி வந்துள்ளனர். அங்கு வந்து பார்த்த பொழுது அருண்குமாரின் குடும்பத்தினர் அனைவரும் மயங்கி விழுந்து இருந்தனர்.இதனை பார்த்த அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த போலீசார் அருண் குமாரின் வீட்டிற்கு விரைந்து வந்து உள்ளனர்.பின்னர் அவர்கள் 5 பேரையும் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் .அப்போது அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர் என்று கூறியிருக்கின்றனர். 

மேலும் அருண்குமார் லாட்டரி சீட்டு மற்றும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாகவே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார் என்று அந்த வீடியோவில் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆகையால் விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்பவர்கள் யார் என்று போலீசார் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் செய்த சோதனையின் முடிவில் பத்திற்கும் மேற்பட்ட லாட்டரிச் சீட்டுகள் வியாபாரம் செய்பவர்களை கைது செய்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டத்தை போலவே நாகர்கோவிலும் 3நம்பர் லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்து வருகின்றனர். இப்படியாக தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக நாகர்கோவில் வடசேரி எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணன்கோவில் மற்றும் வடசேரி பகுதிகளில் இந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.