கொட்டித் தீர்க்கும் அடை மழை! இன்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை! கலெக்டர்கள் அறிவிப்பு!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 1 , 2 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

வளிமண்டலத்தின் மேல் அடுக்கு பகுதியில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை விடாமல் தொடர்ந்து பெய்து கொண்டு வருகிறது. இந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,கடலூர் ஆகிய பகுதிகளில் இயங்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.