கிடுகிடுவென உயரப் போகுது மின் கட்டணம்! ஷாக் அடிக்கும் தகவல்!

தமிழகத்தில் நிலவும் ஒரு மிக பெரிய பிரச்னை மின் பற்றாக்குறை ஆகும்.


இதனை தீர்க்க மத்திய மாற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.  இருப்பினும் இதில் இருந்து மீண்டு வருவது மிக பெரிய சவாலாக உள்ளது என்றே கூறலாம். 

ஏனெனில் அதிகப்படியான மின்சாரம் நிலக்கரி மூலம் தான் தயாரிக்கப்படுகிறது. தொடர்ந்து நிலக்கரி பயன்படுத்தி வருவதால் அதனுடைய பற்றாக்குறை அதிகரித்து விட்டது, இதனால் தான் மின்சார உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் எல்லா விதமான தொழிலகங்களிலும் மின்சாரம் என்பதே அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது என்பது நாம் மறுக்க முடியாத உண்மையாகும்.

நமது அரசாங்கம் தொழிலகங்களுக்கு ஒரு விதமான கட்டணமும், வீடு உபயோகத்திற்கு வேறு ஒரு கட்டணமும் வசூலிக்கிறது. இதுமட்டும் இல்லாமல் வீட்டு உபயோகத்திற்கு முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கு தள்ளூபடியும் அ.இ.அ.தி.மு.க  அரசு வழங்குகிறது.

இவை அனைத்தும் சேர்ந்து மின்சார துறைக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் விளைவித்திருக்கிறது என்று சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. இந்த நஷ்டத்தின் மதிப்பு ரூ.7,760 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.  இந்த நஷ்டமானது கடந்த 2017-2018-ன் படி 78%  உயர்ந்து உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இவ்வளவு பெரிய நஷ்டதை சந்திப்பது இதுவே முதற் முறை என மின்சார துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நஷ்டதை சரி செய்ய, மின்சார கட்டனத்தை உயர்த்தும் முடிவில் அரசாங்கம் உள்ளதாக தகவல்கள் எழுந்துள்ளது. அப்படி உயர்த்தப்பட்டால் பல தரப்பட்ட மக்களும் மிகுத்த அவதிக்குள்ளாக வேண்டிய நிலை கட்டாயம் தமிழகத்தில் உருவாகும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.