காற்று மாசுபாடு பிரச்சினை! தமிழக அரசின் மீது வழக்கு!

சென்னை மாநகரில் நிலவி வரும் காசு மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறி விட்டதாக கூறி , தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இந்தியாவின் முக்கிய நகரமான டெல்லியில் கடந்த மாதம் முதலே காற்று மாசுபாட்டின் அளவு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் டெல்லியில் வாழும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலும் கடந்த சில நாட்களாகவே காற்று மாசுபாடு சற்று அதிகமாகவே இருக்கிறது. 

சென்னையில் நிலவி வரும் காற்று மாசுபாடு சரி செய்வதற்காக, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜிஎஸ் மணி என்பவர், சென்னையில் நிலவி வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தத் தவறியதாக கூறி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் மீது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

மேலும் இதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜிஎஸ் மணி இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் காற்று மாசுபாடு காரணமாக சென்னையில் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன எனவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.