ரோட்டில் கிடக்கும் சடலங்கள்..! ஷாப்பிங் மால்களில் பிணங்கள்..! நகரும் படிக்கட்டுகளில் மனித உடல்கள்! எந்த நாட்டில் தெரியுமா?

ஈரானில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் கொரோனா தொற்றினால் சாலை ஓரங்கள், ஷாப்பிங் மால்களில் இருக்கும் நகரும் படிக்கட்டுகள் என பல இடங்களில் மனித உடல்கள் பிணங்களாக காணப்படுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தன்னுடைய கோரத்தாண்டவத்தை காட்டிவருகிறது. தொடர்ந்து பல லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தங்களுடைய உயிரை இழந்து வருகின்றனர். அந்தவகையில் ஈரான் நாடும் பாரபட்சமின்றி பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பை கண்முன்னே பார்த்து வருகின்றது. இது அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாள்தோறும் கட்டுக்கடங்காமல் பரவும் இந்த வைரஸ் தொற்றினால் அந்நாட்டு மக்கள் அறிகுறி இன்றி உயிரிழக்கும் சம்பவம் ஏற்பட்டு நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. 

ஈரான் நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 1, 46,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் ஈரான் தலைநகரில் அமைந்திருக்கும் சாலையில் இளைஞர் ஒருவர் மூச்சிரைப்பினால் கடுமையாக போராடிக் கொண்டிருந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது மட்டுமில்லாமல் வணிக வளாகங்களில் அமைந்திருக்கும் நகரும் படிக்கட்டுகளில் நின்று கொண்டிருப்போர் அப்படியே கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அங்கு தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தொற்று அறிகுறிகள் கொண்டவர்களை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே அதிக உயிரிழப்புகள் அந்த நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக மிகப்பெரிய குழிகள் தோண்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.