50 நாட்களாக மூடிக்கிடக்கும் ஷாப்பிங் மால்கள்..! உள்ளே பாசி, பூஞ்சை படிந்த பொருட்கள்..!

கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் ஷாப்பிங் மால்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்களில் பூஞ்சைகள் மற்றும் பாசம் ஆகியவை படிந்து பொருட்களை சேதம் அடைய செய்துள்ளன.


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்க மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்த ஊரடங்கு உத்தரவால் ஷாப்பிங் மால்கள் தியேட்டர்கள் என அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன. சுமார் ஐம்பது நாட்களுக்கும் மேலாக பூட்டப்பட்டிருக்கும் இந்தப் ஷாப்பிங் மால்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருள்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில் அவை பூஞ்ஜைகள் மற்றும் பாசிகளால் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவைப் போலவே உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மலேசியாவிலும் அந்நாட்டு அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டது. இதனால் அந்நாட்டிலும் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் ஆகியவை இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டன. சுமார் 50 நாட்களுக்கு மேல் ஆன தடையை தாண்டி தற்போது மலேசிய நாட்டிலுள்ள ஒரு சில ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டுள்ளன. அப்படியாக திறந்த போது அங்கிருந்த ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

அதாவது மலேசியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்றான தி மெட்ரோஜயாவுடனில் அமைந்திருக்கும் எல்லா கடைகளும் கடந்த மார்ச் 18ஆம் தேதி மூடப்பட்டது. இதனையடுத்து குளிர்சாதன வசதியும் முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால் அந்த ஷாப்பிங் மாலில் அமைந்துள்ள தோல் சார்ந்த பொருட்களின் விற்பனையகத்தில் பூஞ்ஜைகள் மற்றும் பாசிகள் ஆகியவை படிந்துள்ள அதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தோல் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பூஞ்சைகளின் தாக்குதலால் குப்பையில் வீசப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அந்த பொருட்களின் விலை மதிப்பு சுமார் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை என அந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் கூறியிருக்கிறார். இதனால் அந்த பொருட்களை சுத்தம் செய்து விற்பனைக்கு வைக்கப்படும் எனவும் அதன் தலைமை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சென்னையிலும் உள்ள பல மால்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில் பூட்டப்பட்ட நிலையிலுள்ள மால்களில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பூஞ்சைகள் மற்றும் பாசிகளலால் நாசமாகப் பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அந்த கடையின் உரிமையாளர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.