சமையல்கட்டில் தவறாமல் இடம்பிடித்திருக்கும் சுக்கு, ஏராளமான மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது. இன்றும் கிராமப்புறங்களில் கைவைத்தியங்களில் அதிக அளவு பயன்படுத்தக்கூடியது சுக்குதான்.
தலைவலியை நொடியில் போக்குமே சுக்கு !!

·
சுக்குடன் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து நெற்றியில் தடவினால், தலைவலி, நீர்க்கோர்வை போன்ற பிரச்னைகள் தீரும்.
·
வெற்றிலையில் சுக்கு வைத்து மென்று தின்றால் வாயுத்தொல்லையும், அஜீரண குறைபாடுகளும் தீரும்.
·
சுக்கு, கருப்பட்டி, மிளகு கலந்து, சுக்கு நீர் குடித்துவந்தால் உடல் அசதி, சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கலாம்.