அய்யோ போச்சே..! குடிபோதை கோபத்தில் நண்பரின் அதை கடித்து துப்பிய இளைஞன்..! கோவை அதிர்சசி!

கோவையில் குடிபோதையில் சண்டையிட்டுக் கொண்ட இருவரில் ஒருவர் மற்ற ஒருவரின் கை விரலை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவையில் புளியகுளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக ஒரு சம்பவம் நடைபெற்றது . அந்த சம்பவத்தின் வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புளியங்குளம் பகுதியில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடையில் குடித்த இருவர் குடிபோதையில் சுற்றித்திரிந்து இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவர் இன்னொருவரின் கை விரலை கரகரவென கடித்து துப்பிய சம்பவம் அங்கிருந்தவர்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.