குடி போதையில் வாகன சோதனை! போதை போலீசால் பயணிகளுக்கு ஏற்பட்ட விபரீதம்! நூலிழையில் தப்பினர்!

குடிபோதையில் பணியில் இருந்த காவலரின் அலட்சிய போக்கினால் விபத்து ஏற்பட்ட சம்பவமானது மதுரை திருநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சனிக்கிழமை இரவன்று மதுரை திருநகர் பகுதியில் வாகன சோதனையில் கணேசன் என்ற காவலர் ஈடுபட்டார். அப்போது அவர் மது அருந்தியிருந்தார். சாலையோரத்தில் கிடந்த இரும்பு தடுப்பை அவர் சாலையின் நடுப்பகுதிக்கு இழுத்து வந்தார்.

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தை அவர் கவனிக்கவில்லை. மில்டன் மற்றும் வேலு என்ற இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். கணேசன் தள்ளிக்கொண்டு வந்த இரும்பு கம்பியின் மீது மோதி இருவரும் கூட விழுந்தனர். அவர்களுக்கு உடம்பில் லேசான காயங்கள் ஏற்பட்டன. இருவரும் கணேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது கணேசன் மது அருந்து இருந்தது கண்டுபிடித்துள்ளனர். மேலும் கணேசன் பேசுவது அவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதில் தான் குடித்திருந்ததை கணேசன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மனைவி இறந்து விட்டதை பொறுத்துக் கொள்ள இயலாமலும், வேலைப்பளு அதிகமானதாலும் அவர் குடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.