மது போதையில் இருந்த டிராக்டர் டிரைவருக்கு உயிர் போன பரிதாபம் - அறந்தாங்கி அட்டூழியம்

டிராக்டர் டிரைவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி என்னும் பகுதி அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள ஆவுடையார் கோவில் என்னும் பகுதிக்கு உட்பட்ட பழந்தாமரை கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகனின் பெயர் ஆத்மநாதன். ஆத்மநாதனின் வயது 38. சில ஆண்டுகள் முன்னர் ஆத்மநாதனுக்கு அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு சுரேந்திரன் என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆத்மநாதன் டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் அவ்வப்போது விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். ஆத்மநாதனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் சாலை ஓரத்தில் அமர்ந்து இரவு குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதற்கிடையே நேற்று இரவும் ஆத்மநாதன் அதே பகுதிக்கு சென்று மது அருந்தி கொண்டிருந்தார். எவ்வளவு கொடுத்து இருந்தாலும் இரவு வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடுவார். வழக்கத்திற்கு மாறாக நேற்று அவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அவருடைய செல்போனுக்கு முயற்சித்த போது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. எவ்வளவு தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.

இன்று விடியற்காலையில் மாரியம்மன் கோவிலின் சாலையோரத்தில் பலத்த காயங்களுடன் ஒருவர் பிணமாக கிடப்பதை பொதுமக்கள் கண்டுள்ளனர். பின்னர் அவர்கள் இறந்திருப்பது ஆத்மநாதன் என்று அடையாளம் கண்டனர்.

ஆவுடையார்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆத்மநாதனின் உடலில் அவர் மீது வாகனம் ஏறி இருப்பதன் தடயங்கள் காணப்பட்டன. அவருடைய தலைப்பகுதியை பலமான பொருளினால் அடித்துள்ளனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலைக்கான காரணங்களை பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறினால் ஆத்மநாதன் இறந்திருக்கக் கூடும் என்று காவல்துறையினர் வகிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.