நண்பனை கொலை செய்து அவன் சடலத்துடன் உறவு கொண்ட கொடூர இளைஞர்கள்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

டெல்லியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர் ஒருவரை கொலை செய்த கொலையாளிகள் பின்னர் அந்த சடலத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


தெற்கு டெல்லியில் உள்ள ஒரு முக்கியமான பகுதி சாராய். அங்கே மதுபானக் கடை அருகே கடந்த செவ்வாய் கிழமை இரவு ஜார்கண்டை சேர்ந்த 3 நண்பர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. குடிபோதை தலைக்கேற என்ன செய்வதென தெரியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மோதல் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் 2 நண்பர்கள் சேர்ந்து ஒரு நண்பரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டனர். ஏற்கனவே முழு போதையில் இருந்த அந்த நண்பர் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் துடி துடித்து இறந்து போனார்.தாங்கள் கொலை செய்துவிட்டோம் என்ற அச்சம் இல்லாமல், 2 பேரும் சேர்ந்த இறந்த நண்பரின் உடலுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதற்கிடையே இறந்துபோனவரின் சகோதரி போலீசாருக்கு தகவல் அளித்திருந்தார்.

மறுநாள் காலை போதை தெளிந்த நண்பர்கள் இறந்துபோனவரின் சடலத்தை அப்புறப்படுத்த அங்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களைப் பார்த்த கொலை செய்யப்பட்டவரின் சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில் அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். குடி குடியைக்கெடுக்கும் என்று தெரிந்தே அளவுக்கு மீறி குடிப்பதானல் ஏற்படும் விபரீதங்கள் சில சமயம் வெட்கி தலைகுனிய வைத்துவிடுகிறது.