18 வயதிலேயே போதை அடிமை..! பிறகு மீண்டு வந்தது எப்படி? ஜெ., பட நடிகை வெளியிட்ட டாப் சீக்ரெட்!

சினிமா வாய்ப்பு கிடைத்தபோது போதைக்கு அடிமையானதால் பல்வேறு நபர்களின் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியுள்ள இந்தி நடிகை கங்கனா ரணாவத் ஆன்மிகம் ஒன்றே தன்னை காப்பாற்றியதாக ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.


இந்தி திரையுலகில் கால்பதித்துள்ள நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக எடுக்கப்படும் தலைவி படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், சிறுமியாக இருக்கும்போது வீட்டை வீட்டு வெளியில் வந்துவிட்டேன். எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என போராடினேன். அதற்காக என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை இழந்தேன். சில மோசமான மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கு பயன்படுத்திக்கொண்டனர்.

பின்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சமயத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். சுமார் 2 வருடங்கள் போதையிலேயே மூழ்கிக்கிடந்தேன். அந்த சமயத்தில் சில மோசமான மனிதர்கள் என்னிடம் பழகினர். அவங்களிடம் பட்ட துன்பம் சொல்லி மாளாது. பின்னர்தான் என் ஒரு நல்ல நண்பர் அறிமுகம் ஆனார். அவர் எனக்கு யோகா சொல்லிக் கொடுத்தார். பின்னர் சுவாமி விவேகானந்தரை தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டேன். எனக்கு மன உறுதியும், திறமையும் உருவாக ஆன்மிகம் வழிகாட்டியது என்று கங்கனா ரணாவத் தனது வீடியோவில் உருக்கமாக பேசி உள்ளார்.