போதையில் மல்லாந்த தந்தை..! அப்பா எழுந்திரிங்க.. அப்பா எழுந்திரிங்க..! கதறிய மகள்..! நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!

பிரபல திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கண் கலங்க வைக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்து உருக்கமாக டுவிட் செய்துள்ளார்.


தமிழ்நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் இன்று முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள் , பிரபலங்கள் போன்ற பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மதுபானங்களை வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரௌபதி திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவர்கள் மதுபான கடைகள் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

மதுபானங்களை வாங்க மதுக்கடைகள் முன்பு தடுப்பு கட்டப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டு அதில் குடிமகன்கள் வரிசையில் உட்கார்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பாவம்...பசியால் வாடும் ஏழைகள்... ரேஷன் கடைக்கு கூட இவ்வளவு ஏற்பாடு இருக்காது என ட்விட்டரில் பதிவு போட்டிருக்கிறார்.

மேலும் மற்றொரு பதிவில் குடித்துவிட்டு சரக்கு பாட்டில்களுடன் சாலையோரம் இருக்கும் அப்பாவைப் பார்த்து ஸ்கூல் யூனிபார்மில் யாராக இருக்கும் மகள் கதறி அழும் போட்டோவையும் வெளியிட்டு இந்த வலி எனக்கு தெரியும். பல தடவை இந்த கேவலமான அனுபவம் எனக்கு உண்டு. என் அப்பா, நண்பன், சொந்தக்காரன் என்று பல தடவை இந்த கேவலமான அனுபவம் எனக்கு உண்டு. அதனால்தான் கேவலமான குடியை நான் எதிர்க்கிறேன். கடைசிவரை எதிர்ப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.