சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து! டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி..! நொடியில் நேர்ந்த பயங்கரம்! நாகர்கோவில் பரபரப்பு!

ஓட்டுநருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் பேருந்து வீட்டிற்குள் புகுந்த சம்பவமானது நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகர்கோயிலில் குலசேகரன்புதூர் ராமாபுரம் சங்கரன்புதூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 50. இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

நாகர்கோவில் மாவட்டத்திலிருந்து ஆரல்வாய்மொழி எனும் இடத்திற்கு அருகே உள்ள தேவசகாயம் மவுண்டிற்க்கு பேருந்தை இயக்கி வந்துள்ளார். 

நேற்றிரவு 9 மணியளவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து தேவசகாயபுரத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் பாலசுப்பிரமணியத்துக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

பாலசுப்பிரமணியம் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்தில் பயணம் செய்துக்கொண்டிருந்த 8 பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். பின்னர் பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்திலிருந்த வீட்டிற்குள் புகுந்துள்ளது. 

இதில் அந்த வீடு இடிந்து நொறுங்கி தரைமட்டமாகி உள்ளது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் பிழைத்தனர். மேலும் நெஞ்சு வலியால் துடித்த ஓட்டுநர் பாலசுப்பிரமணியனுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவமானது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது