தங்கச்சி..! தங்கச்சினு சொன்னியடா? 15 வயது சிறுமி கொடூர கொலையின் பகீர் பின்னணி!

16 வயது மாணவியை பக்கத்து வீட்டுக்காரர் கற்பழித்துள்ளது சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீர்காழி மாவட்டத்தில் சித்தன்காத்திருப்பு என்னும் இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் 16 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு வந்த மாணவி, மாலை நேரத்தில் தோப்பிற்கு சென்றுள்ளார். நெடுநேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர் பதறிப்போயினர். உடனடியாக பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். சாலையோரத்தில் உடலில் பலத்த காயங்களுடன், ரத்தம் வடிந்த நிலையில் மாணவி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். மாணவியை பார்த்த பெற்றோர் பதறியடித்துக்கொண்டு அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். உடலில் ஏற்பட்ட காயங்களை வைத்து பார்த்த போது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் சந்தேகத்தின் பெயரில் பக்கத்து வீட்டுக்காரரான கல்யாணசுந்தரம் என்பவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். 

ஒரு கட்டத்திற்கு மேல் விசாரணையை சமாளிக்க இயலாமல், கல்யாணசுந்தரம் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது "பிரியா மீது எனக்கு ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது. மாலை நேரத்தில் அவள் தோப்புக்குள் செல்வதை பார்த்து நானும் பின் தொடர்ந்தேன். அவளின் வாயை பொத்தி காட்டுக்குள் அழைத்து சென்று கற்பழித்தேன். அவளின் சத்தம் அதிகரிக்கவே, அவளை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்" என்ற வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

காவல்துறையினர் கல்யாணசுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மாணவியின் பெற்றோர் மாணவியை கண்ட இடத்தில், "என் தங்கச்சியை இப்படி செய்து விட்டீர்களே" என்று கூறி கல்யாணசுந்தரம் நாடகமாடியது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.