அந்தரத்தில் தொங்கிய லாரி! அதிர்ச்சியில் மயங்கிய டிரைவர்! 3 மணி நேரம் ஊசல் ஆடிய உயிர்! பிறகு நேர்ந்த அதிசயம்!

சாலையோரம் இருந்த கல்குவாரியில் டிப்பர் லாரி கவிழ்ந்து விழுந்த சம்பவமானது திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள நெடுஞ்சாலையின் சாலையோரத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது.  கீழ்அருங்குணம் என்னும் பகுதியில் இன்று அதிகாலை 5 மணிக்கு கரும்பு சக்கைகளை ஏற்றி டிப்பர் லாரி சென்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த லாரியானது கல்குவாரியில் கவிழ்ந்து விழுந்தது.

லாரியானது கவிழ்ந்து விழுந்ததால் ஓட்டுநர் ரகுராமன் அதிர்ச்சியில் 3 மணி நேரம் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் லாரி கவிழ்ந்து விழுந்ததை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்டெடுத்தனர். மயங்கிய நிலையிலிருந்த ஒட்டுநர்‌ ரகுராமனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சாலையோரத்தில் தடுப்பில்லாமல் இயங்கி வரும் கல்குவாரிகளால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாரளித்தனர்.

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.