கட்டு கட்டா ரூ.50 லட்சம்! பார்த்ததும் ஆசை வந்துடிச்சி! மனைவியை வைத்து ATM வேன் டிரைவரை வளைத்த போலீஸ்!

ஏடிஎம்மில் பணம் நிரப்ப சென்ற காரை ஓட்டுநர் கடத்தி சென்ற சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து பல்வேறு ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்காக 19-ஆம் தேதியன்று ஒரு கார் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த காரில் பணம் நிரப்பப்படுவது கண்காணிக்கும் சூப்பர்வைசரான வினோத்(28), பணம் நிரப்பும் ஊழியரான கே.கே.நகரை சேர்ந்த வினோத்(26), இவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக துப்பாக்கி ஏந்திய அதிகாரியான பீகாரை சேர்ந்த முகமது(27) ஆகியோர் சென்றனர். வேளச்சேரி பகுதியை சேர்ந்த ஆம்புரோஸ் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். அந்த காரில் 87 லட்சம் ரூபாயை எடுத்து சென்றனர்.

வழியில் இருந்த ஏடிஎம்களில் பணத்தை நிரப்பிக்கொண்டு கார் சென்றது. வேளச்சேரி விஜய நகர் 1-வது பிரதான சாலையிலுள்ள ஏடிஎம்மில் பணத்தை நிரப்பி கொண்டிருந்தனர். அப்போது காரில் 52 லட்சம் மீதம் இருந்துள்ளது. ஆம்ப்ரோசை தவிர வேறு யாரும் அப்போது காரின் உள்ளேயில்லை. 

இதனை பயன்படுத்திக் கொண்ட ஆம்புரோஸ் பணத்தை திருடுவதற்காக அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். பணம் இருப்பு சென்ற மூன்று பேரும் வெளியே வந்து பார்த்தபோது கார் அங்கில்லை. உடனடியாக அவர்கள் வேளச்சேரி காவல் நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறி புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் விசாரணையை தொடங்கினர். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் என் மனைவியை காவலில் எடுக்க காவல்துறையினர் அவர் மூலம் ஆம்ப்ரரோசை எளிதாக கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்த போது பணத்தை பார்த்தவுடன் மனம் மாறி விட்டதால் தவறு செய்ததாக கூறியுள்ளார்.

உடனடியாக காவல்துறையினர் ஆம்புரோஸிடம் இருந்த 20 லட்சம் ரூபாயும், அவருடைய மனைவியிடமிருந்து 32 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவமானது வேளச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.