சுற்றி இளம் பெண்கள்! ஆக்சலேட்டரை நான் அமுக்குறேன்..! கியரை நீ மாத்து! பஸ் டிரைவரின் விபரீத விளையாட்டு!

ஓடும் பேருந்தில் இளம் பெண்கள் ஓட்டுநரை சூழ்ந்துகொண்டு பேரூந்தை இயக்கிய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் கல்பேட்டா என்ற இடம் அமைந்துள்ளது. அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் ஓட்டுநரின் அருகே, இளம்பெண்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் அந்த பெண்களை வண்டியில் கியர் மாற்ற அனுமதிக்கிறார். இதனை கூட இருந்த மற்றொரு பெண் வீடியோ எடுக்கிறார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

இந்த வீடியோவை பார்த்த பலர் ஓட்டுநரின் பொறுப்பின்மைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் வாகனத்தை ஓட்டுபவர் இவ்வளவு மெத்தனமாக இருந்தால் பயணிகளின் பாதுகாப்பு நிச்சயம் கேள்விக்குறியாகிவிடும் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

இந்த வீடியோவானது போக்குவரத்து துறையின் ஆர்டிஓவின் கண்களிலும் சிக்கியது. சம்பவம் குறித்து விசாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் உத்தரவிட்டார். விசாரணை மேற்கொண்டதில் ஓட்டுநர் மீது தவறு இருப்பதை ஆர்டிஓ அறிந்துகொண்டார். உடனடியாக ஓட்டுனர் ஷாஜியின் ஓட்டுனர் உரிமத்தை ஆறுமாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த சம்பவமானது கேரளா போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.