அந்த ஒரே ஒரு நாள் செய்த மிகப்பெரிய தவறு..! சென்னையில் கொரோனா வேகமெடுக்க காரணம் இது தான்..! டாக்டரய்யா வெளியிட்ட தகவல்!

சென்னையில் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் நோய் தொற்று பரவும் ஆபத்து அதிகரித்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. இதுவரை சென்னையில் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1256 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் வசித்து வரும் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருமே தொடக்கம் முதலே ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமளிக்கக்கூடாது என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவருமே அவ்வப்போது இந்த நோய்த்தொற்று பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தனர்.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சென்னையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புகள் பற்றி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில் சென்னையில் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டிருப்பதால் நோய் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் ஏற்கனவே இருந்ததை விட பல மடங்கு கூடுதல் கட்டுபாட்டுடன் வீட்டிலேயே அடங்கி இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் அரசும் பல மடங்கு கடுமையாக ஊரடங்கை செயல்படுத்த வேண்டும் எனவும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். 

அதுமட்டுமல்லாமல் தனது வேறு ஒரு பதிவில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் சென்னையில் கடந்த சில நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று சமூக இடைவெளியை பின்பற்றாமல் முண்டியடித்து காய்கறி வாங்க சென்றுள்ளனர். அவர்களில் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்பதால் அவர்களைத் தேடி கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஊரடங்கை முறையாகப் பின்பற்ற வேண்டும் இல்லை என்றால் நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். சென்னை மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அடுத்த 15 நாட்களும் உங்களை நீங்கள் வீடுகளிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கோயம்பேடு சந்தையில் இருந்து  தங்களது சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளிகள் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.