கடலூரில் கொடூரம்! 8 நண்பர்களுடன் சேர்ந்து கட்டிய மனைவியை கணவன் செய்த செய்த பயங்கரம்!

கடலூர் மாவட்டத்தில் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் காரணமாக 8 நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த கணவன், உடலை சிறு துண்டுகளாக்கி வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது.


நெல்லிக்குப்பத்தை அடுத்த வாழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கங்காவும், ஓட்டுநரான ராஜசேகர் என்பவரும் கடந்த  6 ஆண்டுகளுக்கு முன் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்குஒரு மகனும் மகளும் உள்ளனர். ராஜசேகர் பணி காரணமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரும் நிலையில் அண்மைக் காலமாக மனைவி மீது அவருக்கு சந்தேகம் இருந்து வந்ததாகக் கூறப்பட்டுகிறது.

தான் வெளியூர் செல்லும் போதெல்லாம் கங்கா பல்வேறு ஆண்களுடன் தொடர்பில் இருப்பதாக அவர் சந்தேகப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கங்காவுடன் தொடர்புடைய ஆண்கள் அவருடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.

இது குறித்து அவர் கேட்கும்போதெல்லாம் இருவருக்கும் கடும் பிர்ச்சினை ஏற்பட்ட நிலையில் இருவரும் விவாகரத்து வரை சென்றனர். ஆனால் விசாரணையின் போது இருவரும் முறையாக ஆஜராகாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கங்கா குழந்தைகளுடன் மடுக்கரை என்ற இடத்தில் தனியாக வாழத் தொடங்கிய நிலையில் சிறிதுநாள் கழித்து கங்காவைத் தொடர்பு கொண்டு பேசி சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ராஜசேகர் தனது மனைவியின் நடத்தை குறித்து கூறி அழுததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நண்பர்களின் திட்டப்படி கடந்த 1-ஆம் தேதி ராஜசேகர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் கடைக்குச் சென்று  வீடு திரும்பிக் கொண்டிருந்த கங்காவை நண்பர்கள் துண்டு துண்டாக வெட்டிக் கொலைசெய்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.

போலீசாரின் விசாரணையில் ராஜசேகரின் நண்பர்கள் கொன்றதும் அந்த நேரத்தில் ராஜசேகர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததும் சந்தேகத்த எழுப்ப அவர்கள் ராஜசேகரிடம் உரிய முறையில் விசாரித்த போது அவர் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கொல்லத் திட்டமிட்டு செயல்படுத்தியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ராஜசேகர் மீது அவரது நண்பர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.