வீட்டுக்குள் நுழைந்த இரட்டைத் தலை பாம்பு! அதிர்ச்சியில் உறைந்த விவசாயி! எங்கு தெரியுமா?

சீனா நாட்டில் விவசாயி ஒருவரின் வீட்டில் இரட்டை தலை பாம்பு இருந்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீனா நாட்டில் ஹெப்பை என்ற சிறிய மாகாணம் அமைந்துள்ளது. இங்கு சென்ஷோ விவசாயி வசித்து வருகிறார். இந்த வார தொடக்கத்தில் இவருடைய வீட்டில் இரட்டை தலை பாம்பு ஒன்று தரையில் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். வீடியோவானது அதனை பார்த்த மக்களை பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், சீனா நாட்டில் உள்ள பல்வேறு பத்திரிகைகளில் இந்த சம்பவத்திற்கு செய்தி வெளியிட்டன. இந்த வீடியோவை இதுவரை 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவானது சீனா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.