இப்டிலாமா டிரஸ் போடுவ? ஷார்ட்ஸ் அணிந்து ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

நடுரோட்டில் ஷார்ட்ஸ் அணிந்து சென்றுகொண்டிருந்த பெண்ணுக்கு ஆணுறுப்பு அறிவுரை கூறும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


3-ஆம் தேதி இரவன்று பெண்ணொருவர் பெங்களூருவில் அமைந்துள்ள எச்.எஸ்.ஆர். லேயவுட் (HSR LAYOUT) என்ற பகுதியில் தன்னுடைய ஆண் நண்பருடன் ஷாப்பிங் முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அவர் டி-ஷர்ட்டும், குட்டை பாவாடையும் அணிந்திருந்தார். இந்நிலையில் மற்றொரு வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த நபர் இந்த பெண்ணின் உடையை பார்த்து முகம் சுளித்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு அருகே சென்று "உங்களுக்கு வெளியே அணிந்து வருவதற்கு வேறு எந்த உடையும் இல்லையா" என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதனால் சற்று கோபம் அடைந்த பெண் " உடை அணிவதற்கு எங்களுக்கு சுதந்திரம் உள்ளது. என்ன உடை அணிய வேண்டும் என்பது குறித்து நீங்கள் எங்களுக்கு கூற வேண்டியது இல்லை" என்று பதிலளித்தார். உடனடியாக அந்த நபர் பெண்ணை திட்ட தொடங்கினார். 

ஆத்திரம் அடைந்த பெண்ணின் நண்பர் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு திட்டிய நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினார். அப்போது அந்த நபர், "இது போன்ற உடைகளை அணியக்கூடாது. இது இந்தியாவின் விதி" என்று கூறியதற்கு இருவரும் கடுமையாக கோபம் அடைந்துள்ளனர்.

பெண்ணின் நண்பர் நிகழ்ந்த அனைத்தையும் வீடியோவாக எடுத்தார். காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கலாம் என்று எண்ணியபோது, காவல் நிலையத்திலும் இந்த நபர் கூறியது போலவே நடந்தால் நிலைமை மோசமாகி விடும் என்று உணர்ந்து எடுத்த வீடியோவை மட்டும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அந்த இளம்பெண் மும்பை நகரத்தில் பிறந்து பெங்களூருவில் வாழும் ஐடி ஊழியர் என்பது தெரியவந்துள்ளது.