பிகில் தீபாவளி ரிலீஸ் இல்லை? தியேட்டர் அதிபர்கள்- தயாரிப்பாளர் மோதல்! சற்று முன் வெளியான புது அப்டேட்!

பிகில் படத்தின் வெளியாகும் நாள் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று படத்தின் தயாரிப்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.


இளையதளபதி விஜயின் நடிப்பில் வெளிவரப்போகும் அடுத்த திரைப்படம் "பிகில்". இந்த திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிகட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் படத்தின் வெளியாகும் தேதி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா டுவிட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.

"பிகில் படத்தின் ரிலீஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். தணிக்கை குழுவின் ஒப்புதலுக்கு பிறகு படத்தின் ரிலீஸ் நாள் அறிவிக்கப்படும். எந்த நாளில் வெளிவந்தாலும் பாக்ஸ் ஆபீஸில் அது ஒரு சிறந்த நாளாக அமையும். இந்தப்படத்தின் போஸ்டர் மாலையில் வெளியாகும்" என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால் படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று கூற அர்ச்சனா மறுத்துள்ளார். இதனால் திட்டமிட்டபடி தீபாவளிக்குபிகில் வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆனந்த்ராஜ், ஜாக்கி ஷெராப், விவேக், கதிர் ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தீபாவளி ஞாயிறன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் வியாழக்கிழமை படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் வியாழக்கிழமைக்கு பதில் தீபாவளியன்று படத்தை வெளியிட்டால் தான் கூடுதல் காட்சிகள் ஓட்ட முடியும் என்று திரையரங்க அதிபர்கள் கூறுவதால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்கிறார்கள்.