நடிகையை படுக்கைக்கு அழைத்த இளைஞரை ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் நடிகை வெளியிட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்லம் என் கூட நீ படுக்கணம்..! ரேட் எவ்வளவு? அட்ட கத்தி நடிகைக்கு மெசேஜ் அனுப்பிய இளைஞன்! அதிர்ச்சி காரணம்!

"அட்டகத்தி" படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நந்திதா. இவர் அந்தப்படத்தில் நன்றாக நடித்த பின்னர் "எதிர்நீச்சல்", "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.
இதனிடையே இவர் சமீபத்தில் நடித்து வெளியான "தேவி 2" திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை எட்டவில்லை. தற்போது அவர் புதுமுக இயக்குநரான கீதா ராஜ்புட் இயக்கத்தில் 7 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
இதனிடையே நந்திதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவர் தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். நாளுக்கு நாள் குறுஞ்செய்தியில் ஆபாசம் அதிகரித்துக்கொண்டே சென்றது. சிலமுறை அருவருக்கத்தக்க வகைகளும் அந்த இளைஞர் நந்திதாவை பார்த்து பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், குறிப்பிட்ட நபர் தனக்கு அனுப்பிய மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். "இது போன்ற இளைஞர்களுக்கு குடும்பம் இல்லையா" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படத்தையும் தேடி கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.