மாணவர்கள் அட்டூழியம்! குளியல் அறையில் ’அது’ செய்யாதீர்கள்! சர்க்குலர் அனுப்பிய பிரபல கல்லூரி!

விடுதியின் குளியலறையில் மாணவர்கள் சுயஇன்பம் அனுபவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று பிரபல கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.


உத்தரகண்ட் மாநிலத்தில் ரூர்கி எனும் பகுதி அமைந்துள்ளது. இந்நகரத்தில் இந்திய தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த 10 தொழில்நுட்ப கழகங்களில் இதுவும் ஒன்று. உலகின் தலைசிறந்த 70 தொழில்நுட்ப கழகங்களிலும் இந்த பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வித்தியாசமான சுற்றறிக்கையை பல்கலைக்கழகத்தில் வெளியிட்டனர். 

அதாவது விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் குளியல் அறையில் அதிக அளவில் சுய இன்பம் அனுபவித்து வருகின்றனர். இதனால் கழிவு நீர் குழாய்களில் அடைப்புகள் ஏற்படுகின்றன. இந்த அடைப்புகளை நீக்க நிறைய பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு முதல் விடுதி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும். சுயஇன்பம் அனுபவித்துத்தீர வேண்டுமென்றால் அவரவரது விடுதி அறையிலேயே அனுபவித்துக் கொள்ளுங்கள். இதிலேதேனும் ஆட்சேபனையிருந்தால் விடுதி காப்பாளரிடம் முறையிடுங்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.