அதிமுக கூட்டணி விவகாரம் குறித்து நிர்வாகிகள் யாரும் பேட்டி தரக்கூடாது! ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

அதிமுகவை பற்றின கூட்டணி விவகாரங்களை யாரும் பொது வெளியிலோ பத்திரிகையிலோ பேசக்கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து புதிதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர் என்ற அறிக்கையை அவர்களது கட்சியை சார்ந்த உறுப்பினர்களுக்காக அவர்கள் இருவரும் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதாவது குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மத்திய அரசிடம் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வந்தனர் இந்நிலையில் அன்வர் ராஜா மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அவர் அதிமுக கட்சி பாஜகவுடன் கொண்ட கூட்டணி குறித்தும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார் . 


இதன் விளைவாக தற்போது ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையில் , "தலைமைக் கழக அறிவிப்பு. அஇஅதிமுக கழகத்தின் கூட்டணி வியூகங்களைக் குறித்து தலைமை மட்டுமே முடிவெடுக்கும். கழக உறுப்பினர்கள் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிக்க கூடாது" என்று வெளியிடப்பட்டுள்ளது.