திருமண ஏற்பாடுகள் தீவிரம்! ஆனால் கடலுக்குள் குதித்த இளம் டாக்டர்! சென்னை பரபரப்பு!

திருமணத்திற்கு பணத்தை ஏற்பாடு செய்ய இயலாமல் மாணவி கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் மன்னார்குடி என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளின் பெயர் அபிநயா. அபிநயாவின் வயது 25. இவர் சென்னை புறநகரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தார். குரோம்பேட்டையில் உள்ள ஏ.ஜி. மருத்துவமனையில் எம்.டி. பயின்று வருகிறார். 

இவருக்கு அடுத்த மாதம் 12-ஆம் தேதியன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்காக கடன் கேட்டுள்ளார். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கவில்லை. இதனால் தனக்கு திருமணம் நடக்காது என்று விரக்தி அடைந்த அபிநயா நேற்று முன்தினம் இரவு சென்னை கடற்கரையில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

கடற்கரை காவல் நிலையத்திற்கு பின்னால் உள்ள பகுதியில் தற்கொலை செய்துக்கொள்ள அழுது கொண்டே சென்று கொண்டிருந்த அபிநயாவை கல்பாக்கம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் மற்றும் துப்பின் ஆகியோர் காப்பாற்றியுள்ளனர்.

பின்னர் அவரை பத்திரமாக கடற்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவருக்கு ஆறுதல் கூறி அவருடைய சித்தப்பாவான மருதவாணனிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவமானது மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.