பிரியாணிக் கடை பாக்ஸிங்... பியூட்டி பார்லர் அடிதடியை மறக்காதீங்க... தி.முக.வை கலாய்த்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இப்போது தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.


பொதுவாகவே மென்மையாகப் பேசி அரசியல் செய்யும் பன்னீர், இப்போது ஜாலியாக தி.மு.க.வை கலாய்த்துப் பேசியிருப்பது வைரலாகி வருகிறது. அப்படி என்ன பேசினார் என்று கேட்கிறீர்களா..?

அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தொழிலுக்கும் இடையூறு இல்லாமல் இருந்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் இந்த நிம்மதி இருக்குமா? பிரியாணி கடையில் சாப்பிட்டுவிட்டு காசு கேட்டால் ‘பாக்சிங்' குத்து விடுகிறார்கள். பியூட்டி பார்லரில் பெண்களை அடிக்கிறார்கள். ஆட்சிக்கு வராதபோதே தி.மு.க.வினர் இத்தனை அட்டூழியங்களை செய்கிறார்கள்.

எனவே பிரியாணி கடைக்காரர்கள் மற்றும் இதர கடைக்காரர்களை பார்த்து கேட்கிறேன், பழைய சம்பவங்களை எல்லாம் யோசித்து பார்த்து ஓட்டு போடுண்ணே... அ.தி.மு.க. ஆட்சியில் மட்டும்தான் உங்களுக்கு நிம்மதி இருக்கும். நல்லது நடக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

எப்போதும் சீரியஸாக இருக்கும் ஓ.பி.எஸ். இப்படியெல்லாம்கூட பேசுவாரா என்று கட்சியினர் ஆச்சர்யப்பட்டு பாராட்டி வருகிறார்கள்.