நரேந்திர மோடி..! இந்தியாவின் தந்தை..! மெர்சல் ஆக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

பிரதமர் மோடி தான் இந்தியாவின் தந்தை என்று கூறி உலக மக்களை அதிர வைத்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.


அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நியுயார்க்கில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கு இடையிலனா உறவை மேம்படுத்துவது குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. மேலும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மோடி - டிரம்ப் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டிரம்ப், இந்தியாவில் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு தந்தையை போல மோடி அனைத்தையும் இந்தியாவில் ஒருங்கிணைக்கிறார். அவர் இந்தியாவிற்கு தந்தை போல் செயல்படுகிறார். 

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மோடி தான் இந்தியாவின் தந்தை என்று கூறினார் டிரம்ப். இதனை கேட்டு மோடியே ஒரு கணம் ஆடிப்போய்விட்டார். ஏனென்றால் இந்தியாவின் தந்தை என்றால் அது மஹாத்மா காந்தி தானே.