ஹீரோயின் பெயரே தெரிஞ்சிக்காம எல்லாத்தையும் செஞ்ச ஹீரோ..! மேடையில் அம்பலப்படுத்திய தொகுப்பாளினி!

ஹீரோயின் பெயரே தெரியாமல் அவருடன் ரொமான்ஸ் செய்தார் என்று டோலா திரைப்படத்தின் ஹீரோவை பற்றிய பகிர் தகவலை தொகுப்பாளினி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது வெளியிட்டிருக்கிறார்.


இரண்டே கலைஞர்களை வைத்து வித்தியாசமான பாணியில் திரைப்படமாக டோலா திரைப்படம் வெறும் பத்தே நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இந்திய திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் திரைப்படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய திரைப்படத்தின் ஹீரோ ரிஷி ரித்விக் பேசிய போது, இந்த படத்தில் நடிப்பதற்கு என்னை அழைத்து கதை கூறினார்கள். இரண்டு பேர் தான் என்றாலும் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஆகையால் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு நான் ஒப்புக் கொண்டேன்.  ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் அனைவரின் கடுமையான உழைப்பால் 10 நாட்களில் வெற்றிகரமாக இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம் என்று அவர் கூறினார்.

மேலும் பேசிக்கொண்டிருந்தபோது கதாநாயகன் ரிஷி அனைவருக்கும் நன்றி கூற ஆரம்பித்தார். அப்போது பேசியவர் ஹீரோயின் பெயர் தெரியாமல் மேடையிலிருந்த ஹீரோயினிடம் அவரது பெயர் என்ன என்று கேட்டார். பின்னர் கதாநாயகியின் பெயர் பிரேர்னா என்று கேட்டு அறிந்துகொண்டார். இதனை பார்த்து அனைவரும் சிரித்தனர் ஹீரோயின் பெயரே தெரியாமல் பத்து நாட்களாக படப்பிடிப்பில் ஒன்றாக வேலைப்பார்த்து வந்தார்களா ? என்று கிண்டலாக கேள்வி எழுப்பினர்.

மேலும் அங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி கதாநாயகியின் பெயரே தெரியாமல் அவருடன் ரொமான்ஸ் செய்த முதல் கதாநாயகன் தமிழ் சினிமாவிலேயே இவர்தான் என்று கிண்டலடித்தார். தற்போது இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் ஷாம் குமார் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த திரைப்படமானது திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.