என்னைத் தாண்டித் தான் நீ அவர கொத்தனும்..! எஜமானரை காப்பாற்றிவிட்டு பாம்புடன் போராடி உயிர் நீத்த நன்றியுள்ள ஜீவன்!

எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நாய் 2 பாம்புகளுடன் சண்டையிட்டு உயிரிழந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியது.


தஞ்சை மாவட்டத்தில் பூதலூர் என்னுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட ரெயிலடி பழைய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய வயது 64. இவர் தன்னுடைய வீட்டு நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலையில் இவருடைய நாய் வழக்கத்திற்கு மாறாக குரைக்க தொடங்கியுள்ளது.

அலறி அடித்துக்கொண்டு கோவிந்தசாமி வீட்டு வாசலுக்கு சென்று பார்த்தபோது கண்ணாடி விரியன் மற்றும் நல்ல பாம்பு ஆகியவற்றுடன் வளர்ப்பு நாய் சண்டை போட்டு கொண்டிருந்தது. 2 மணி நேரமாக போராடிய நாய் 2 நல்ல பாம்புகளையும் கடித்து குதறி தன்னுடைய எஜமானர் குடும்பத்தை காப்பாற்றியது. 

பாம்பு உடலில் இருந்த விஷம் உடலில் ஏறியதால் நாய் அங்கேயே சுருண்டு விழுந்தது. "எங்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரை கொடுத்து எங்கள் செல்லம் போராடியது" என்று கண்ணீர் மல்க கோவிந்தசாமி கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.