சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்..! பாய்ந்து வந்து கடித்துக் குதறிய பிட்புல்..! பதற வைத்த சம்பவம்!

பிரேசிலில் சிறுவன் ஒருவனை கடித்து குதறிய நாயிடமிருந்து தன் உயிரை துச்சமாக நினைத்து இளைஞரொருவர் காப்பாற்றிய சம்பவம் பொது பதிவான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


பிரேசில் நாட்டு தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் 4 வயது குழந்தையுடன் ஒரு பெண் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பிட்புள் வகையை சார்ந்த நாயானது சற்றும் எதிர்பார்க்காத வகையில் அந்தக் குழந்தையின் மீது பாய்ந்து சரமாரியாக கடித்து குதறியது. 

அந்நேரத்தில் அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர் தன் உயிரை துச்சமாக நினைத்து அந்த குழந்தையை நாயிடம் இருந்து போராடி காப்பாற்றினார். இந்த குழந்தையை காப்பாற்றி உடன் இளைஞர் அருகிலிருந்த காரின் மேற்கூரை மீது அமர வைத்தார். 

 நீண்ட போராட்டத்திற்கு பின்பு அந்த இளைஞரும் நாயிடமிருந்து தப்பித்துவிட்டார். அவரும் அதே காரின் மேற்கூரையில் மீது ஏறி அமர்ந்து கொண்டார். ஒருவழியாக குழந்தையும் இளைஞரும் அந்த வெறிபிடித்த நாயிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்த நாய் குழந்தையை வெறித்தனமாக கடித்து வீடியோ பதிவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.