கொரோனா காலத்தில் அலுவலகம் இயங்குமா? தமிழக அரசின் புதிய நெறிமுறைகள்!

கொரோனா காலத்தில் தமிழகத்தில் உள்ள அலுவலகங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. அப்படியென்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்த்துடலாம்.


65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், கர்ப்பிணி பெண்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், எந்தக் காரணம் கொண்டும், இவர்கள் வெளியே வரக்கூடாது.

வெளியே செல்லும் ஒவ்வொரு நபரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அதேபோன்று, எச்சில் துப்புவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும். பணியாளர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

அனைத்து அலுவலகங்களிலும் தெர்மல் சோதனை கருவி பரிசோதனை, கிருமி நாசினி பயன்படுத்திய செய்த பின்னரே பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆலோசனைக் கூட்டங்களை (மீட்டிங்) நேரடியாக நடத்தாமல் வீடியோ கான்பரசிங் மூலமாக நடத்த அறிவுறுத்தல்

எந்தவித கொரோனா அறிகுறியும் இல்லாத பணியாளர்கள் / பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் பணியாளர்களை அனுமதிக்க கூடாது. முடிந்த வரையிலும், வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கலாம்

.ஒரு பணியாளர் அல்லது இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் முழு அலுவலகத்தை மூட வேண்டிய அவசியமில்லை. கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தபின் பணியை தொடரலாம். அதிகளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் கிருமிநாசினி தெளித்த பின் 2 நாட்களுக்கு அலுவலகத்தை மூட வேண்டும் என்று தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.