மூன்றில் ஒரு பெண்ணுக்கு அடக்கமுடியாத சிறுநீர் பிரச்னையா? வந்தாச்சு டிஜிட்டல் சிகிச்சை ஜோகோ

ஜோகோ ஹெல்த் என்பது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, சென்னையில் இயங்கி வரும் ஒரு டிஜிட்டல் சிகிச்சை நிறுவனமாகும்.


இந்நிறுவனம் பக்கவாதம், முதுகெலும்பு காயம், பெருமூளை வாதம், பெல்ஸ் வாதம், சிறுநீர்-மலம் அடங்காமை மற்றும் இதையொத்த இன்னபிற நரம்பியல் - தசை (நியூரோ மஸ்குலர்) நோய்களுக்கு நவீன முறையில் சிகிச்சையளிக்க, ஜோகோவை உருவாக்கியுள்ளது.

ஜோகோ, தன்னிச்சையான உடல் செயல்பாடுகளின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு காட்சி அல்லது செவிவழி கருத்துகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய மன-உடல் நுட்பமான 'தசை மின்னலை பயோ பின்னூட்ட முறையை’ பயன்படுத்துகிறது. நாள்பட்ட வலிகள், சிறுநீர் மற்றும் மலம் அடங்காமை போன்ற விஷயங்களில் தன்னார்வ கட்டுப்பாட்டைப் பெறுவது உள்ளிட்ட நோய்களை / நிலைமைகளைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது.

இன்றளவும் உலகளவில் பெண்களின் மன அழுத்தத்திற்கு சிறுநீர் அடங்காமை மற்றும் மலக்கசிவு ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மேலும் வெட்கம் அல்லது தயக்கம் காரணமாக இந்த குறைபாடு முறையாகக் கவனிக்கப்படாமலேயே விடப்படுகிறது. உதாரணமாக, இந்தியாவில் மூன்றில் ஒரு பெண்ணிற்கு இந்தக் குறைபாடு இருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கிறது.

ஜோகோவின் நவீன சிகிச்சை முறைகள் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜோகோ பக்கவாதம் மற்றும் பிற நரம்பு-தசை பிடிப்பு / சேதார நிலைகள் காரணமாக இழந்த தன்னார்வ கட்டுப்பாட்டு தசைகளை மேம்படுத்த, மத்திய நரம்பு மண்டலத்தின் மறுசீரமைப்பை மேம்படுத்தி உதவி புரிகிறது.

ஜோகோ அணியக்கூடிய வயர்லெஸ் தசை மின்னலை பதிவு (ஈஎம்ஜி) சென்சார்கள் மற்றும் காப்புரிமை பாதுகாக்கப்பட்ட மொபைல் ஆப் துணையுடன், நியூரோபிளாஸ்டிசிட்டியை மேம்படுத்தும் வகையில் சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் தசை தளர்வு, நரம்பியல்-தசைகளின், இயக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் மறுசீரமைப்புக்கு ஏற்றவாறு, மாற்றக்கூடிய சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் விளையாட்டுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இவையனைத்தும் அனைத்தும் நியூரோபிளாஸ்டிசிட்டியை மேம்படுத்தி, விரைவாக நரம்பு - தசை தொடர்புடைய குறைபாடுகளை நீக்குவதற்கு உதவியாக அமைகிறது.