பிரதமரை விமர்சித்தால் நாட்டையே அவமதிப்பதா? என்னங்க சார் உங்க சட்டம்?

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இந்தியாவை தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், பிரதமரை பற்றி ஏதேனும் விமர்சனம் வைத்தால், உடனே ஆன்ட்டி இந்தியன் அல்லது இந்தியாவுக்கு அவமானம் என்று பா.ஜக. துள்ளி எழுகிறது.


நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதையும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியதையும் பெரும் குற்றமாக கருதி, அவர்கள் மீது உரிமை பிரச்னையை பா.ஜ.க. எழுப்பி வருகிறது. விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள அச்சம் கொண்டவர் மோடி என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

அது உண்மைதான் என்பதற்கு உதாரணம் என்ன தெரியுமா? மோடி கடந்த ஆறு வருடங்களில் ஒரு முறையாவது பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறாரா? உலகத்துலயே இரண்டு முறை பிரதமராகி இருந்தாலும், நேருக்கு நேர் ஊடகங்களை சந்திக்க பயப்படுகிறார். 

ஆனால், மோடியைப் பார்த்து கேள்வி கேட்டால், ‘கேள்வி கேட்டு அசிங்கப் படுத்துனா ௮து இந்தியாவையே அசிங்கப் படுத்துன மாதிரி’ என்பது என்ன நியாயம். மோடி அசிங்கப்படுவது என்பது தனிப்பட்ட மோடி சார்ந்தது மட்டும்தான். அதனால், பா.ஜ.க. அமைதியாக இருக்கவில்லை என்றால், இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.