இந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா?

கொரோனாவுக்குப் பின் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் பொருளாதார மந்தத்தில் திகழ்கின்றன.


 ஆனால், தமிழகம் மட்டும் இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மேலும், பொருளாதார மறுமலர்ச்சியைக் காட்டும் வகையில் வாகன விற்பனை உயர்ந்துள்ளது. அதேபோன்று பத்திரப்பதிவும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே தமிழகத்தில் பத்திரப்பதிவு வருமானம் உயரத்தொடங்கிருக்கிறது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ. 786 கோடியாக இருந்த பத்திரத்தாள் விற்பனை இந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ரூ.792 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ. 23 கோடி அளவுக்கே பத்திரப்பதிவு வருமானம் இருந்தது. தற்போது, இந்த வருமானம் பலமடங்கு அதிகரித்துள்ளது.

பத்திரங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு செப்டம்பரில் உயர்ந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு 2 இலட்சத்து 38 ஆயிரத்து 978 பத்திரங்கள் பதிவுசெய்யப்பட்டன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 இலட்சத்து 98 ஆயிரத்து 956 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளதாக ‘ப்ரொஜெக்ட் டுடே’ வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை தெரிவித்தது. இரண்டாவது காலாண்டில் ரூ 23 ஆயிரத்து 332 கோடி அளவு முதலீட்டில் 132 திட்டங்களை ஈர்த்துள்ளது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையையோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டும் செப்டம்பர் மாத விற்பனை 17.18 சதவீதம் அதிகரித்துள்ளது. தானே விவசாயியாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழக விவசாயிகள் வளமாக இருப்பதை டிராக்டர் விற்பனை இரு மடங்காக உயர்ந்தது எடுத்துக்காட்டுகிறது.

இந்த விவகாரங்கள் எதுவுமே தெரியாமல் ஸ்டாலின் அரசை குற்றம் கூறிவருவதுதான் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.