சிறுவன் தாடையில் அரை அடி நீள கட்டி! 8 மணி நேர ஆப்பரேசன்! வெற்றிகரமாக அகற்றி சாதித்த சென்னை டாக்டர்கள்!

சிறுவனின் தாடையில் வளர்ந்த 1.5 கிலோ கட்டியை மருத்துவர்கள் அகற்று சாதனை புரிந்துள்ளனர்.


சென்னையில் கொளத்தூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு வினோத் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இத்தம்பதியினருக்கு எபினேசர் என்ற 7 வயது மகனுள்ளது குறிப்பிடத்தக்கது.

எபினேசருக்கு சிறுவயதிலேயே வலது தாடையில் சிறிய அளவில் கட்டி ஒன்றிருந்துள்ளது. அந்த கட்டி நாளடைவில் பெரிதாகி அரையடி அளவிற்கு வளர்ந்தது. இதனால் எபினேசரால் சரிவர பேசவும் சாப்பிடவும் இயலவில்லை. உடனடியாக பெற்றோர் அவரை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பரிசோதித்த மருத்துவர்கள் எபினேசருக்கு "பெமிலியல் சிமெண்டோ ஆசிபையிங் பைப்ரோமா" என்ற மரபணு தொடர்பான நோய் ஏற்பட்டுள்ளதாக கண்டறிந்தனர். மேலும் இந்த கட்டியானது வலதுபுற பற்களுடன் இணைந்து வளர்ந்து இருந்ததால் அரசு பல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் பிரசாத் தன்னுடைய குழுவினருடன் இணைந்து எபினேசருருக்கு அறுவை சிகிச்சை செய்தார். 8 மணி நேரம் நிகழ்ந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இன்னும் சில நாட்களில் சிறுவனால் பெரிதாக பேசவும் சாப்பிடவும் இயலும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உலகிலேயே 50 பேரிடம் மட்டும் இந்த நோய் இருப்பதாகவும், இந்தியாவில் இதுவே முதல் முறை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுவனின் உடல்நலத்தை சீர்செய்து மருத்துவர்களுக்கு அவருடைய பெற்றோர் மனமார நன்றி தெரிவித்தனர்.