மூக்கின் சதையை அகற்றுவதற்கு பதில் குடலை அகற்றிய டாக்டர்! சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

மூக்கின் வெளியே வளர்ந்த சதைக்கு ஆபரேஷன் செய்வதற்கு பதிலாக ஹெர்னியா ஆபரேஷன் செய்த மருத்துவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்திலுள்ள மனப்புரம் பகுதி அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள  உள்ள மஞ்சேரி என்ற டௌனில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 7 வயது சிறுவன் ஒருவன் மூக்கின் வெளியே வளர்ந்த சதையை வெட்டியெடுக்க  ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டான். சிறுவனின் பெயரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு நோயாளியின் பெயரும் ஒன்றாகும்.

அவர் ஹெர்னியா ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டார். பெயர் ஒற்றுமையால் குழம்பிப்போன மருத்துவர் சிறுவனுக்கு ஹெர்னியா ஆபரேஷன் செய்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் தற்போது உடல் நிலை மோசமாகி வேறு மருத்துவமனையில் உள்ளார். கேரளா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சரான சைலஜா இதற்கு விசாரணை ஆணையம் அமைத்தார்.

விசாரனை முடிந்த பின்னர் அவர் கூறுகையில், மருத்துவர்களின் கவனக்குறைவுக்கு நோயாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்றார்.மேலும் அந்த மருத்துவரை தகுதிநீக்கம் செய்துள்ளதாகவும் கூறினார்.