சிகிச்சைக்கு வந்த பெண்ணுடன் டாக்டர் உல்லாசம்! வைரலாகும் ஹாஸ்பிடல் வீடியோ!

கண்டனத்திற்குரிய வகையில் மருத்துவரும் அவருடைய நோயாளியும் இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை கண்ட ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


ராஜ்ஹௌரி மாவட்டம் ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் பெண்ணொருவர் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு தன் உடல் உபாதைகளை கூறி சிகிச்சை பெற்றார்.

ஓரிரு நாட்கள் கழித்து மருத்துவமனையின் டாக்டருடன் அந்தப் பெண் உல்லாசமாக இருப்பது போன்று வீடியோ ஒன்று வெளிவந்தது. இந்த வீடியோவானது ராஜ்ஹௌரி மாவட்டத்தில் பெரிதளவும் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை குறிப்பிட்ட பெண்ணிடம் சிலர் காட்டியுள்ளனர்.

உடனே அவர், அம்மாவட்டத்தின் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். அதாவது, தான் சிகிச்சைக்கு சென்ற போது மார்பிங் செய்து ஆடையின்றி அவருடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோவை எடுத்துள்ளனர் என்றும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளித்தார்.

ராஜ்ஹௌரி மாவட்டத்தின் காவல் ஆணையரான பிரணவ் மஹாஜன் என்பவர் தனிக்குழு ஒன்றை அமைத்து விசாரணையை தொடங்கினார். முதற்கட்டத்தில் அந்த வீடியோவானது மருத்துவமனையின் உள்ளே எடுக்கப்பட்டது என்பதும் வீடியோவை எடுப்பதற்கு கண்டிப்பாக மேலும் ஒருவர் உதவி செய்திருக்ககூடும் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இந்த வீடியோவானது பல்வேறு இடங்களில் பரவி வருகிறது என்பதும், ராஜ்ஹௌரி மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் 4 டாக்டர்கள் பகிர்ந்துள்ளனர் என்பதையும் காவல்துறையினர் கூறினர். இந்த வீடியோவை இதற்குமேல் பகிராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.