சிகிச்சைக்கு வந்த 25 பெண்களை தொடக்கூடாத இடத்தில் தொட்ட ஆண் டாக்டர்! 5 ஆண்டுகளாக அரங்கேறி வந்த கொடுமை!

மருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 25 பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி உள்ள சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிழக்கு லண்டனில் ரோம்ஃபோர்ட் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு மனீஷ் ஷா என்ற 50 வயது முதியவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். 2009-ஆம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை இவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த 25-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, பிரிட்டன் நாட்டின் தொலைக்காட்சி நட்சத்திரமான கூடி என்பவரின் வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டி பெண்ணொருவரை ஸ்மியர் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி தோள்பட்டை வலியால் தம்மிடம் சிகிச்சைக்கு வந்த பெண்ணொருவருக்கு இவர் ஏஞ்சலினா ஜோலியை எடுத்துக்காட்டாக காட்டி "டபுள் மஸ்டெக்டோமி" என்ற சிகிச்சையின் மூலம் மார்பகங்களுடன் விளையாடினார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவர் மீது சுமத்தப்பட்டுள்ள 21 பாலியல் குற்றச்சாட்டுகளில், 13 குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். வழக்கு தொடங்கிய உடனே மனீஷ் ஷா மருத்துவம் புரிவதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் கிழக்கு லண்டன் நீதிமன்றம் அடுத்த வருடம் பிப்ரவரி 7-ஆம் தேதியன்று தீர்ப்பு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.