என் மகள் ஆன்மா இப்போது சாந்தி அடைந்திருக்கும்! ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் பெண் டாக்டரின் தந்தை!

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்ததையடுத்து பெண் மருத்துவரின் தந்தை என் மகளின் ஆன்மா இப்போது சாந்தி அடையும் என்று மனம் நெகிழ்ந்து கூறியுள்ளார்.


முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பெரும் இணைந்து ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வந்தவரை கடந்த 27 ஆம் தேதி புதன்கிழமை பாலியல் பலாத்காரம் செய்து தீயிட்டுக் கொளுத்தினர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து ஹைதராபாத் போலீசார் சிறப்பு படை ஒன்றை அமைத்து குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கண்டறிந்தனர்.

அவர்கள் நால்வரையும் தனியாக அடைத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் போலீசார் தன் மகளை கொடூரமாக கொலை செய்த நால்வர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்று மருத்துவரின் தந்தை புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து தெலுங்கானா கமிஷனர் போலீஸ் அதிகாரிகள் சிலரை பணியிடை நீக்கம் செய்தார்.

பின்னர் கமிஷனரின் வழிகாட்டுதலின்படி சிறப்பு படையினர் 4 பேரையும் தீவிரமாக விசாரித்து வழக்கின் உண்மை நிலவரத்தை கண்டறிந்தனர். மேலும் அந்த நான்கு பேரையும் சம்பவம் நடைபெற்ற அதே இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்வதற்காக முடிவு செய்துள்ளனர்.

அதற்காக அந்த நான்கு பேரும் இன்று அதிகாலை 3:30 மணி அளவில் சந்தனபள்ளி டோல்கேட்டுக்கு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் . அப்போது அந்த 4 பேரும் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்தபோது போலீசார் நான்கு பேரையும் என்கவுன்ட்டர் செய்து கொலை செய்துவிட்டனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த மருத்துவரின் தந்தை மனம் நெகிழ்ந்து போலீசாருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் . மேலும் இந்த சம்பவத்தை நாடு முழுவதும் கொண்டு சென்றது மீடியா தான் என்றும் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் என்னுடைய மகளின் ஆன்மா தற்போது நிம்மதி அடையும் ..சாந்தி அடையும்.. எனவும் அவர் கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி ஆனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.