நிர்வாணமாக கணவனிடம் வந்த மனைவி சடலம்! இறுதிச்சடங்கில் கண்விழித்து எழுந்த பகீர் சம்பவம்!

இறந்து விட்டதாக கூறி சடலமாக ஒப்படைக்கப்பட்ட பெண் திடீரென்று உயிர்பெற்ற சம்பவமானது பராகுவே நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தென்னமெரிக்கா நாடுகளுக்குள் ஒன்று பராகுவே. இங்கு கிளாடிஸ் ராட்ரிகஸ் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவருடைய கணவரின் பெயர் டுயார்டே.

இந்நிலையில் கிளாடிஸ் ராட்ரிகஸ் உடல்நிலை மிகவும்  மோசமானதை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், ராட்ரிகஸ் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றது. ஒரு கட்டத்தில் அவருடைய மருத்துவர், அவர் இறந்து விட்டதாக சான்றிதழையும் குடும்பத்தினரிடம் வழங்கியுள்ளார்.

ராட்ரிகஸ் குடும்பத்தினர் அவருக்கு இறுதி சடங்கு செய்வதற்காக உடலை மயானத்திற்கு எடுத்து சென்றனர். இறுதி சடங்கு செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவருடைய உடலில் திடீரென்று அசைவு ஏற்பட்டதால், அருகில் இருந்த உறவினர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக மீண்டும் அவரை டுவார்டே மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்து சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் மீண்டும் பரிசோதித்த பின்னர், அவருடைய உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர். ராட்ரிகஸின் கணவர் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை மீது புகார் அளித்துள்ளார்.

மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காமல், அவசரமாக என்னுடைய மனைவி இறந்து விட்டார் என்று கூறினர். மேலும் என்னிடம் நிர்வாணமாக அவருடைய சடலத்தையும் வழங்கினர். மருத்துவமனையினர் கூறுகையில், "ராட்ரிகஸ் நாடித்துடிப்பை கணிக்க இயலாததால், இந்த தவறு ஏற்பட்டது. இதற்கு மருத்துவமனை சார்பில் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்" என்று பதிலளித்துள்ளனர்.

இந்த சம்பவமானது பராகுவே நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.