கெட்ட கொழுப்பைக் குறைக்கணுமா… கடுகு போதுமே…

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அந்த அளவுக்கு அளவில் குட்டியூண்டாக இருந்தாலும் ஏராளமான மருத்துவப் பண்புகளோடு திகழ்கிறது கடுகு.


·         கடுகு அதிக கலோரி தரக்கூடியது. நார்ச்சத்தும் நிரம்பியுள்ளதால் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் கடுகுக்கு உண்டு.

·         மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுகு அரைத்து பற்று போட்டால் ஆறுதல் கிடைக்கும்.

·         கடுகில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் சமையலுக்கு தாராளமாக பயன்படுத்தலாம்.

·         கடுகில் உள்ள கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும், தாமிரம் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் பயன்படுகிறது