நரம்புகளைத் தூண்டும் பெருங்காயத்தின் ரகசியம் தெரியுமா?இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்!!

பெருங்காயம் என்பது பங்கி என்ற செடியில் கிடைக்கும் பால் போன்ற பசையில் இருந்து கிடைக்கிறது. இந்த செடி ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது.


கசப்பு மற்றும் காரத்தன்மை கொண்ட பெருங்காயத்தை சமையலில் பயன்படுத்தும்போது அற்புதமான வாசனை கிடைக்கிறது. சாம்பார், ரசத்தில் பெருங்காயம் பயன்படுத்தும்போது சுவை நரம்புகளைத் தூண்டி ருசியை அதிகப்படுத்துகிறது.

• உணவுகளை அதிவிரைவில் செரிக்கவைக்கும் தன்மை பெருங்காயத்துக்கு இருக்கிறது.

• வாயுக் கோளாறை சரி செய்யும் தன்மை இருப்பதால் வயிறு உப்புசம், வயிறு வலி போன்ற பிரச்னைகளை மட்டுப்படுத்துகிறது.

• மலச்சிக்கலை நீக்குவதுடன் குடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் தன்மையும் பெருங்காயத்துக்கு இருக்கிறது.

• மூச்சு தொந்தரவு இருப்பவர்கள் பெருங்காயப் பொடியை அனலில் போட்டு புகையை சுவாசித்தால் மூச்சடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வெங்காயம், பூண்டுக்கு உள்ள மருத்துவ குணங்கள் பெருங்காயத்துக்கும் உண்டு. நரம்பு, மூளை சுறுசுறுப்பாக செயல்படவும் பெருங்காயம் சிறப்பாக செயலாற்றுகிறது.